பக்கம்:படித்தவள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 155 பக்கத்தில் இருந்த அப்பா அவள் கேட்பது என்ன என்று தெரியாமல் "என்னமோ கேட்கிறாளே, அதைச் சொல்லிக்கொடு” என்று பரிந்துரை பேசினார். "இந்த மாதிரிபேசும் இடங்களுக்குச் சிறுவர்களை அழைத்து வரக்கூடாது" என்று அந்த அம்மையார் முடிவு செய்தார்கள். மாலியின் வாய்ப்பு வந்தது. “மணம் என்பது உயிரினங்களின் தேவையை நிறைவு செய்கிறது. மிருக உணர்வுகளுக்கு வழிவகை செய்யும் நாகரிக அமைப்பு” என்று பேசினான். இவ்வளவு பச்சையாகப் பேசுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தன் இச்சையாகச் சிலகருத்துகளைச் சேர்த்தான். "காதலித்தவரையே கலியாணம் செய்து கொள்வதுதான் காரிகையர்க்கு வகுத்துரைத்த நெறி; உடல் உறவு ஒருமுறை ஏற்பட்டு விட்டாலும், தான் விரும்பிக் கெட்டு விட்டாலும், மற்றவர் வலியக் கெடுத்தாலும் அவனையே அவள் மணம் செய்து கொள்வதுதான் பாரதப் பண்பாடு; இதிலிருந்து மாறாத மனநிலை தேவைப்படுகிறது. பாகவதத்தில் ஒரு கதை; சம்பாவதியின் மகன் சாம்பன்; அவன் ஜாம்பவானின் பெயரன்; கண்ணனின் காதல் மகன்; மிடுக்கும் துடுக்கும் நிறைந்தவன்; அவனை ஒடுக்குவார் இல்லை; தடுப்பார் இல்லை; ஆதலின் துரியனின் மகள் இலக்கணை என்பவளை இரதத்தில் ஏற்றிக் கொண்டு துவாரகை சென்றான்; அவள் விருப்பத்தைப் பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/157&oldid=802471" இலிருந்து மீள்விக்கப்பட்டது