பக்கம்:படித்தவள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 गाé கவலைப்படாமல் அவள் வாழ்வில் புதிய திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டான். துரியன் இதைத் தரிக்காமல் கன்னன் வீடுமர் முதலிய வீரர்களை உடன் அழைத்துச் சென்று அவளை மீட்டுவந்தான்; அவனைச் சிறையில் மாட்டிவைத்தான். இறுதியில் என்ன ஆயிற்று? கெடுத்தவனுக்கு அவள் மனைவியாவாள்” என்று பாரதப் பெருமக்கள் பஞ்சாயத்துக் கூறினர். அந்தப் பஞ்சரத்தினக் கிளி பார்த்தசாரதியின் மருமகள் ஆயினாள்; இது பண்டைய வரலாறு" என்று எடுத்துக் கூறினான். "இன்றைய இயலுக்குவருவோம், அருமையான தமிழ்ப் படம் "புதியபாதை", அவன் காசுக்காக ஒரு வேசியின் சொற்கேட்டு மணமகளை வலியக் கெடுத்து வாலிப முறுக்கை அவளிடம் காட்டுகிறான். அவள் என்ன செய்கிறாள்: பேசி முடித்த மணத்தை ஏசிவிட்டுக் கொஞ்சமும் கூசாமல் தன்னைத் தொட்டவனையே தொடர்கிறாள். "அவன் தன் ஊர் பேர் சொல்லமுடியாத அனாதை. காசு தந்தால் தன் வாழ்க்கையை மாசுபடுத்திக்கொள்ளத் தயங்காதவன்; என்றாலும் அவனையே நாடினாள். ஏன்? பாலியல் புனிதமானது; அதைப் போற்றுவது கற்பியல்; அது அற்புதமானது; காதல் வாழ்க என்று வாழ்த்துவோம்; கை கொட்டிப்பாடுவோம்" என்று மேசையைத் தட்டிப் பேசினான். காதலுக்காக ஏங்கும் இளங் கன்னியர் சிலர் இதை வரவேற்றுக் கைதட்டினர்; காளையர் பலர் கூத்து ஆடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/158&oldid=802472" இலிருந்து மீள்விக்கப்பட்டது