பக்கம்:படித்தவள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 157 மணமகளின் முகம் சுளித்தது. பேச்சாளன் மனம் களித்தது. "பாலியலுக்கும் மணவாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எது முதல் எது தொடர்ச்சி என்ற பேதம் இல்லை; ஆனால் ஒன்றை ஒன்று தொடர்வதுதான் வாழ்வு நெறி; இதை அறிக" என்று பேசி முடித்தான். காதலுக்காகச் சமாதி எழுப்பிக் கொண்டவர்களின் சரிதங்களை இன்றும் கவிதை எழுதுபவர்கள் பாராயணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது; மறுக்கவும் முடியாது. லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராபதி, தேவதாஸ், ரோமியோ ஜூலியட் இந்த உலக மகா காவியங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன. இதை மறந்துவிட்டதால் தான் இன்று ஊழல்கள் பெருகிவிட்டன. அமைதி அழிந்து விட்டது; அங்கங்கே வெடிகள் வைத்து இடிபாடுகள் உண்டாக்குகின்றனர். மனிதநேயம் வளர வேண்டுமானால் காதல் நேயம் அதற்கு முதற்படி; இதைப்படி, அதன்படி நடந்து கொள்வதுதான் மேற்படி" என்று படிப்படியாகத் தன் கருத்துகளை அடுக்கிச் சென்றான். காதலித்தவனைப் "போய்வா மகனே" என்று அவனிடம் வாய் சாலாக்குப் பேசி அனுப்பிவிட்டு மற்றொருவனைக் கைப்பிடிக்கும் கயமை நீண்டநாள் நிற்காது. உண்மை ஒருநாள் தலை காட்டாமல் போகாது; அப்பொழுது பவுர்ணமியில் அகப்பட்ட கள்வன் நிலைதான் ஆகும். தப்ப முடியாது; சமுதாயம் ஒப்புக்கொள்ளாது: நெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/159&oldid=802473" இலிருந்து மீள்விக்கப்பட்டது