பக்கம்:படித்தவள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 16t சிலருக்கு மற்றவர்கள் நன்றாக வாழ்வது பிடிப்பது இல்லை; தாங்கிக் கொள்ள இயல்வது இல்லை. அதில் இவன் விதி விலக்கு அல்ல என்பது அறிந்தேன். 3 எனக்கும் கந்தசாமிக்கும் நட்பு புத்தகக் கடையால் ஏற்பட்டது. தி. நகரில் இன்று பல புத்தகக் கடைகள் பெருகி உள்ளன. ஏதாவது நல்ல புத்தகம் தேவைப்பட்டால் அந்தப் பக்கம்தான் செல்ல வேண்டியுள்ளது. அண்ணாசாலையில் ஆங்கிலப் புத்தகங்கள் ஆக்கிரமித்து உள்ளன. திருவல்லிக் கேணி பாரதி சாலையில் கல்லூரிப் பள்ளிநிறுவனங்களுக் கான பாட நூல்களை வாங்க முடியும். கலைத்தொடர்பான புதிய படைப்புகள். நாடகங்கள், தெய்வ நூல்கள் இன்று தி. நகரில்தான் கிடைக்கின்றன. பட்டுப் புடவை தேவைப் பட்டாலும் நகைக் கடைகளை நாடினாலும் நல்ல தமிழ் நூல்களைத் தேட வேண்டுமானாலும் அங்குதான் செல்ல வேண்டும். ஒரு கடையில் கிடைக்காவிட்டாலும் இன்னொரு கடையில் கிடைக்கும். இவன் பாண்டி பஜாரில் நல்ல முக்கியமான இடத்தில் இலக்கியப் பண்ணை என்ற பெயரில் புத்தகக்கடை வைத்திருந்தான். நல்ல வியாபாரம்; வசதியும் உடையவனாக இருந்தான். பட்டப் படிப்பை எட்டிப் பிடிக்க வில்லை: கட்சி அரசியலில் ஈடுபட்டுப் புத்தகத் தொழிலைக் கற்றுக் கொண்டான். சில்லரை புத்தகக் கடையில் ஆரம்பித்து சொந்தமாக ஆசிரியர்களைக் கொண்டு எழுத வை: நூல்களை வெளியிட்டுத் தொழிலைப் பெருக்கி வ அவனிடக்தில் கேட்ட புத்தகம் இல்லை என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/163&oldid=802478" இலிருந்து மீள்விக்கப்பட்டது