பக்கம்:படித்தவள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 Uाé# கிடைக்கும் இடம் அறிந்து வாங்கிக் கொடுப்பான். அதனால் அவனை எனக்குப் பிடித்து இருந்தது. நெருங்கிய வாடிக்கைக்காரன் என்ற முறையில் எனக்கு அழைப்பு மணத்துக்கு அனுப்பி இருந்தான். மாலியின் மனைவி காஞ்சனை மழை வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன குடிசை மறுபடியும் நிர்மாணிக்கப்பட்டது போல் தோற்றம் அளித்தாள். மழை வந்தது; பள்ளமாக இருந்த இடத்தில் நீர் பாய்ந்தது; குடிசை சாய்ந்து விட்டது. மறுபடியும் அது புதிதாக வேயப்பட்டது என்றாலும் பழைய குடிசையின் பொலிவு அதற்கு இல்லை; அரசு அள்ளிக் கொடுக்கும் நன்கொடையில் கீற்றுகள் வாங்கி வேயப்பட்டவை அவை. அந்த வீட்டுக்குள் போனாலே பழைய குடிசை அடித்துக் கொண்டு போன செய்தியை அவர்களால் பேசாமல் இருக்க முடியாது. அவர்கள் அந்தச் சோகக் கதையைச் சொன்னால்தான் துயர் ஆறும்; அவர்கள் நிலையும் மாறும். அதைக் கேட்பது மரியாதையும் ஆகும். "உங்களுக்குக் குழந்தை?" "பிறந்தது இறந்தது” என்றார். பிறப்பும் இறப்பும் இணைந்து நின்ற சோகச் செய்தி .[نئ9lئے 'காரணம் ?" 'றைப்பிரசவம்; அவசரப்பட்டு அவதரித்துவிட்டது”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/164&oldid=802479" இலிருந்து மீள்விக்கப்பட்டது