பக்கம்:படித்தவள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 Jाdf "அது அவன் அம்மாவின் அப்பாவின் பெயர். அம்மா பாகிஸ்தானி; அவள் பேசுவது இந்துஸ்தானி, இராஜஸ்தான் அவள் பழைய இராசதானி" என்றேன். "அது எப்படி இந்த உறவு உண்டாயிற்று?” "என் மகன் படிக்கச் சென்றான்; அவளும் அங்குப் படிக்க வந்தாள். பூர்வீகம் பாகிஸ்தான். அவள் இப்பொழுது தங்குவது இந்துஸ்தான். அமெரிக்க நாட்டில் பல்கலைக் கழகம் அவர்களைச் சந்திக்க வைத்தது. காலை முழுவதும் படிப்பு: பின்பு மாலை முழுவதும் களிப்புக்கு உதவும் காதல் சந்திப்புக்கள்; கனிவு தரும் நல்ல வாழ்க்கை அவர்கள் அமைத்துக் கொண்டது. அதன் விளைவு என் பெயரன்; பின் பிறந்தவள் மீனாட்சி, அது இந்தப் பக்கம்" என்று விளக்கினேன். "இவன் குல்லா போட்டு இருக்கிறானே." "வடநாட்டு முல்லாக்கள் இதை அதிகம் பாவிக்கிறார்கள்: நேருவுக்குப் பின்னால் அவர் விட்டுச் சென்றவை பல; அதில் இந்தத் தொப்பி மறக்க முடியாத ஒன்று.” - "இது கிரிக்கெட்டுக் கலாச்சாரம்; வாளைப் பிடித்த கைகள் இன்று கிரிக்கட்டு மட்டைகளைப் பிடித்து வெய்யிலில் உலர்ந்து காய்கின்றன. என்றேன். காஞ்சனையின் குடும்பம் எனக்கு அறிமுகம் ஆகியது: குடும்பம் என்று சொல்லிக் கொள்வதற்குத் தன்னைத் தவிர வேறு ஆள் இல்லை. கட்டிக் கொண்டவனைத் தவிர. அவள் விநாயகர் சதுர்த்திக்குச் செய்யும் எள்ளுருண்டையையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/166&oldid=802481" இலிருந்து மீள்விக்கப்பட்டது