பக்கம்:படித்தவள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 एाdf சேர்ந்து விட்டால் புதிய தொழில் தொடங்கலாம்; இவர் மறுக்கிறார்" என்று கூறினாள். "என்ன தொழில்?" "இன்று தேவை புத்தகம் அல்ல; தண்ணிர்” என்றாள். நான் ஒன்றும் பேசவில்லை. 6 என் வீட்டில் போன் ஒலிக்கிறது; என் மகளும் மருமகளும் பேரன்பேத்தியோடு சென்னை வருவதாக இச்செய்தியைப் பரப்பிவிடுகிறேன். அதனால் மாலி என் வீட்டுக்கு வந்தான். வெளிநாட்டிலிருந்து வருவதால், புதிய காசெட்டுகள் கிடைக்கும் என்று அவன் என் வீட்டை முற்றுகை இடுகிறான். அவன் பேச்சு கந்தசாமி அஞ்சலையைத் தொடர்கிறது. "ஏற்கனவே ஒரு காதலன் இருக்கிறான்; அவனோடு அவள் தொடர்பு வைத்திருந்தாள்; அதை முறித்துக்கொண்டு இவனை மணம் செய்து கொண்டிருக்கிறாள்; கந்தசாமிக்குத் தெரிந்து விட்டது; அவளை விட்டு விலக விரும்புகிறான்" என்றான். எனக்கு அது அதிர்ச்சி தந்தது. அஞ்சலை அன்று பேசிய பேச்சில் அர்த்தம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது. அவன் மனைவி காஞ்சனையைப் பற்றி விசாரித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/172&oldid=802488" இலிருந்து மீள்விக்கப்பட்டது