பக்கம்:படித்தவள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 175 "கடைசி நேரம்; முதலில் போனில் பேசி அவளை நிறுத்துங்கள்; இவர்கள் வாழ்வைத் திருத்துங்கள்:” "ஆடவர்கள் தவறு செய்வதை இந்தப் பூலன் தேவி தாங்கிக் கொள்ளமாட்டாள். அஞ்சலையை அழையுங்கள். என்னை மணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் இவர் என் கடந்த கால வாழ்வை விமர்சிக்காமல் இருக்க முடியுமா? அப்பொழுது விரிசல் உண்டானால் என்ன செய்வார்? நான் சுதந்திரமான எழுத்துக்காரி! இந்த அற்ப விஷயங்கள் என்னைக் கட்டுப்படுத்தாது. மாலி என்னை விரும்பலாம்; நானும் அவரை நேசிக்கலாம். குழந்தை வேண்டும் என்று முதல் தாரம் வற்புறுத்துவதால் நான் மனைவியாக வேண்டும் என்பதை இந்தப் பூலன் ஏற்கமாட்டாள். இந்த தேசத்தில் எத்தனையோ குழந்தைகள் ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை வளர்த்துக் கொள்வது தான் அவர்கள் கடமை. மாலி தவறுகள் செய்யலாம்; நானும் தவறுகள் செய்திருக்கலாம்; தவறுகள் அடிப்படையில் எந்தக் கட்டிடமும் அமைக்கக் கூடாது. எனக்குச் சுதந்திரம் தான் உயிர்; எழுத்து என் தலைவன். மற்றவர்களுக்கு நான் கட்டுப்பட முடியாது. ஆயிரத்தோர் இரவுகள் அருமையான கதை, அந்த சுல்தானை அவள் திருத்தினாள். கதைகளைச் சொல்லிக் கந்தசாமியைத் திருத்த வேண்டியது நம் கடமை; பாலியல் வேறு மண இயல் வேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/177&oldid=802493" இலிருந்து மீள்விக்கப்பட்டது