பக்கம்:படித்தவள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை படி "திருடன் பெண்டாட்டி கம்மினாட்டி" என்ற பழமொழி கூறி வருகிறார்கள். "ஏன். இப்படி இந்தப் பழமொழி வழங்குகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்". "அந்தப் பொம்மனாட்டி ஒரு சீமாட்டி; அவள் இப்பொழுது என்ன.ஆனாள் தெரியுமா?" என்று கேட்டான் என் நெருங்கிய நண்பன் வேணுகோபாலன். “காமாட்டி! சொல்லித் தொலை?” என்று அவசரப்படுத்தினேன். "அதை என் . வாயால் நான் சொல்ல மாட்டேன்; பத்திரிகை படி" என்று கூறினான். "நான் பொதுவாகப் பத்திரிகைகளைப் படிப்ப தில்லை; அப்படிப் படித்தாலும் அரசியல் தலைப்புகளை மட்டும் பார்ப்பேன். கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது என்னை இழுக்கும்; குற்றச் சாட்டுகள் எதிர்க்குற்றச் சாட்டுகள் இவை புதிய அரசியல் உருவாக்குவதற்கு ஆரம்பம் என்று பார்ப்பேன். இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/179&oldid=802495" இலிருந்து மீள்விக்கப்பட்டது