பக்கம்:படித்தவள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ராசீ



“எப்படி எழுதினாலும் அவர்கள் மார்க்குப் போட்டு விடுகிறார்கள்”.

“காரணம் ?”

“என் கைழுயெழுத்து அழகாக இருக்கும்”

“நல்லது தான்”

“என் தலையெழுத்துச் சரியாக இல்லையே” என்று பதில் கூறுகிறாள்.

“அன்று எழுதி வைத்தவன் அப்படி; அதை அழிப்பது நம்மால் முடிவது எப்படி? எதுவும் நடக்கும் அதன்படி”.

“என்ன சார் வேதாந்தம் பேசுகிறீர்கள்?” என்றாள்.

“என் சித்தாந்தம் எடுபடாது என்பதை உணர்கிறேன்”

“அது பழைய காலம். வாய்ப்பு தான் தேவை; அதற்குப் பிறகு எல்லாம் சரியாகப் போய்விடும்” என்றாள்.

வெளியே போகிறவரை எங்கே போகிறாய் என்று கேட்கக்கூடாது தெரிகிறது; கேட்காமலும் இருக்க முடியவில்லை. நிச்சயமாகப் பிறை போர்க்களத்துக்குப் போகவில்லை; பெரிய காரியம் எதுவும் இருக்காது.

அவள் கையில் பை ஒன்று வைத்திருந்தாள்;

“கடைக்கா?” என்று கேட்கிறேன்.

“இல்லை: ஷாப்பிங்கிக்கு” என்று சொல்லிச் சிரித்தாள்.

“பலமா இருக்குமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/18&oldid=1123430" இலிருந்து மீள்விக்கப்பட்டது