பக்கம்:படித்தவள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 शाdf தேசத்தின் புதிய சக்திகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் கவனிப்பேன்; நாட்டு நடப்புகள் அரசியல் கிளர்ச்சிகள் இந்தச் செய்திகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அரசியல் கட்டுரைகள் ஒன்று இரண்டு வரும்: அவையும் பயன் உடையன என்பது என் கருத்து; அவற்றையும் புரட்டிப்பார்ப்பேன். கிரைம் செய்திகளைப் படிப்பது இல்லை. அவற்றைப் படித்தால் நம் சுற்றுப்புறம் நமக்கு அச்சத்தை விளைவிக்கிறது. கதவு திறந்து வைக்கவே முடிவதில்லை. என் மனைவியைத் தனியாக வெளியே அனுப்புவதற்குத் தடைபோட வேண்டி நேர்கிறது. அவளை நகைகளைப் போட்டுக் கொண்டு போகாதே என்று கூறுவேன். அவள் உடனே "நீங்கள் போட்டது இல்லை; என் அப்பா எனக்குச் செய்து போட்டவை; அதைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும்; நகை இல்லாமல் போனால் நாகரிகம் உடையவர் யாரும் மதிக்க மாட்டார்கள். காய்கறிக்கடைக்காரிகூடக் கழுத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டுத்தான் பதில் சொல்கிறாள். பட்டம் பெற்ற பெண்கள் கூடப் ப்டிப்பு முடிந்ததும் நாலு காசு சம்பாதித்தால் நகைக் கடைக்குத்தான் போகிறார்கள். இந்தியப் பெண்கள் இந்த நகைகளால்தான் நாகரிகத்தைக் காக்கிறார்கள். பொன்னும், பெண்ணும் உடன் பிறப்புகள்: இரட்டைப் பிறவிகள்; பிரிக்க முடியாது. நீங்கள் தயவு செய்து நாளிதழ்கள் படிக்காதீர்கள். அதில் கிரைம்களுக்கு முதலிடம் தருகிறார்கள். அதைப் படித்துவிட்டு உங்களைப் போன்றவர்கள் எங்களை அடக்கி வைக்க முற்படுகிறீர்கள். நீங்கள் அவற்றைப் படிக்காதீர்கள்" என்று எனக்கு அறிவுரை தருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/180&oldid=802497" இலிருந்து மீள்விக்கப்பட்டது