பக்கம்:படித்தவள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை படி 179 "நகை போனால் போகிறது; உன்னை யாராவது:” "உங்களைத் தவிர எந்த ஏமாளியும் என்னைத்தொட மாட்டான்; பயப்படாதீர்கள்” என்று என்னை விமரிசிக்கிறாள். "ஆனால் ஒன்று: எந்தக் காரணத்துக்கும் என்னைப் போலீசு நிலையத்துக்கு அனுப்பக் கூடாது. இது போச்சு அது போச்சு என்று என்னை அறுக்கக் கூடாது; பேசாமல் மஞ்சள் கயிறு மாட்டிக்கொள்; அது போதும்” என்கிறேன். எனக்குக் காவல் நிலையம் என்றாலே அலெர்ஜி. அவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடை தரமுடியும். அவர்கள் பசுமையான கேள்விகளைக் கேட்பார்கள்; அதற்குப் பதில் சொல்ல முடியாது. ஒரு மருத்துவ மனைக்குச் சென்றால் கேட்கின்ற அவலக் குரல்களை அங்குக் கேட்க நேர்கிறது. ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஒரு பிக்பாட்டை விளாசிக் கொண்டிருந்தார். அவர் நீதிக்காகப் போராடுவதைக் கண்டு வியந்தேன். "இவர் அல்லவா சட்டத்தின் காவலர்? இதைப்போல் ஒவ்வொரு காவல் அதிகாரியும் கடுமையாக இருந்தால் எவன் திருடுவான்? எவன் முரணுவான்?" என்று பாராட்டினேன். "வெளியே ஒரு பெண் எதையோ பறி கொடுத்து விட்டதாக வந்து கத்திக் கொண்டு இருந்தாள்" "கவலைப்படாதே எதை இழந்தாலும் இவர்கள் தேடிக் கண்டு பிடித்துவிடுவார்கள்" என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/181&oldid=802498" இலிருந்து மீள்விக்கப்பட்டது