பக்கம்:படித்தவள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 शाdf அவளைச் சுற்றிப் பொது ஜனங்கள் கிளர்ச்சி மனப் பான்மையில் உற்சாகமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர் ஏதோ மக்கள் சங்கத் தலைவர் என்று தெரிந்தது. "எப்படி அவர்கள் உன்னைக் கெடுத்தார்கள்?” என்று கேட்டார். "ஒருவரா? எத்தனை பேர்?" என்று உபதலைவர் உப கேள்வி கேட்டார். "நீ சும்மாவா இருந்தே! எதிர்க்கவில்லையா?" என்று செயலாளர் வினவினார். "குரல் எழுப்பி அழைத்தால் யாராவது உதவிக்கு வந்திருப்பார்களே" என்றான் ஒருவன். "இன்னொருவர் சேர்வதற்கு அது வாய்ப்பாகி விடும்" என்று திருத்தம் கூறினான் மற்றொருவன். "ஏன்டி! அவனுங்ககிட்டே ஆளுக்கு இவ்வளவு என்று கேட்டு வாங்காமல் விட்டுட்டே" என்று கேட்டாள் அனுபவம் மிக்க ஒத்த வயது உடைய மாது. "பாவிங்க அவர்களுக்குக் கூடப் பிறந்த தங்கைகள் இல்லையா" என்று கேட்டாள் ஒரு மங்கை. "தங்கை இருந்தால் என்ன செய்வது" - என்று நறுக்கென்று குறுக்கே கேட்டான் தங்கைகளுடன் பிறந்த தமையன் ஒருவன். "அவர்களை எப்படி விட்டு விட்டாய்” என்று கேட்டார் ஒரு சமூக சேவகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/182&oldid=802499" இலிருந்து மீள்விக்கப்பட்டது