பக்கம்:படித்தவள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை படி 181 "இதைத் தேசத்துப் பிசச்சனையாக்க வேண்டும்" என்றார் கட்சிக்காரர் ஒருவர். "வேலியே பயிரை மேய்ந்து விட்டது; வேலிகள் இந்த நாட்டில் சரியாக இல்லை" என்று விவரம் தெரிந்தவன் விளக்கம் கூறினான். "தடிப்பசங்கள்” என்றேன் நான். "ஆமாம் கையில் தடி வைத்து ரோந்து சுற்றிக் கொண்டிருப்பார்களே அவர்கள்தான்” என்றான் இன்னொருவன். நீதிவிசாரணை நடத்தும் சப்-இன்ஸ்பெக்டரிடம் இதைச் சொன்னால் கவனிப்பார் என்று அவர்களை அழைத்துக் கொண்டு நானே சென்றேன். - "அந்தப் பெண் கூலிவேலை .ெ பவள்” என்று தெரிந்தது. "இதனால் உனக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்: பாவம் உன் புருஷன் உன்னை வைத்து வாழ மாட்டானா?” என்று கேட்டுவிட்டேன். "என் புருஷனை இவர்கள் முதலில் வாழ விடட்டும்: முட்டிக்கு முட்டி தட்டிக்கொண்டு இருக்கிறார்களே அவர்தான் என் புருஷன்" என்றாள். "ஏன் அவரைப் பிடித்து உள்ளே போடவேண்டும்?” என்று கேட்டேன். "பிக்பாக்கெட் செய்துவிட்டார்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/183&oldid=802500" இலிருந்து மீள்விக்கப்பட்டது