பக்கம்:படித்தவள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை படி 185 ரகளை செய்வதாக இருந்தால் நாங்கள் ஏன் பெடிஷன்கள், முறையீடுகள், பிராதுகள் இவற்றைத் தேடுகிறோம். அதற்கு எனக்குத் திராணி இல்லை. இனியும் உப்புத் தண்ணிர் தான் குடித்துக் கொண்டு இருக்கிறேன்; என்ன செய்வது? "அடிதடிக்குத்தான் மக்களும் பயப்படுகிறார்கள்; அதிகாரிகளும் பயப்படுகிறார்கள். சுத்தமான குடிவாசிகள் எதுவும் செய்ய முடியாது” என்பதை அறிந்தேன். காவல் நிலையம் செல்வது என்றால் இந்தக் கசப்பான அனுபவம் குறுக்கிடுகிறது. அதனால் என் மனைவியிடம் அறிவித்தேன். ஏதாவது பறி கொடுத்து விட்டால் நீ என்னிடம் சொல்லாதே. நான் காவல் நிலையம் மட்டும் கால் வைக்க மாட்டேன்" என்றேன். "அப்பொழுது புகார் கூடக் கொடுக்கமாட்டீர்களா?” "கொடுக்கலாம், நீ என்னை எதிர்த்து நகைகள் போட்டுச் சென்றாய் என்று எப்படி உன்னைக் காட்டிக் கொடுப்பது? நகை ஆசை இருக்கிறது. ஒன்று இரண்டு போனால் அதற்காகக் கவலைப் படக் கூடாது; அதைவிட அங்குப் போனால் அது சுலபம் அல்ல; சும்மா இருப்பதே சுகம்" என்றேன். "என் நகையும் போகாது; நானும் உங்களிடம் வந்து சொல்ல மாட்டேன்” என்று சொல்லி அவற்றைப் பத்திரமாக லாக்கரில் வைத்தாள். ஆடம்பரம் அவளை விட்டு அகன்றது. இந்திய சராசரிக் குடிமகளாகச் செயல் பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/187&oldid=802504" இலிருந்து மீள்விக்கப்பட்டது