பக்கம்:படித்தவள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 शाdf 2 என் மனைவியைத் தேடிக் கொண்டு ரசீது புத்தகங்கள் எடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் வந்தது. என் மனைவி ஏதோ சீட்டுக் கட்டி இருக்கிறாள். அதில் ஏதோ சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் கேட்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். "உங்கள் நன்கொடை வேண்டும்?" என்றார்கள். "எதற்கு?" என்று கேட்டேன். "கோயில் விழா எடுக்கிறோம், அதில் பட்டி மன்றங்கள் நடத்துகிறோம்; சாலமன் பாப்பய்யா தலைமை வகிக்கிறார். டிஸ்கோ சாந்தியை வைத்து நடனம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். இதற்கு அடுத்து குஷ்பூவைக் கூப்பிட இருக்கிறோம். சூப்பர் ஸ்டார் படிப்பாளி என்ற படம் சூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார். அவர் வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார். கவிஞர் பொன் முத்து அவர்களை அழைத்து இருக்கிறோம், அவர் வெளிநாட்டுப் பயணம் முடித்து விட்டு வருகிறேன் என்று கூறி இருக்கிறார். ஆப்பிரிக்க நாட்டில் ஆதி பரா சக்தி கோயில் கட்டுகிறார்கள். கட்டி முடிந்ததும் அவர் அங்கே போக இருக்கிறார், அது முடிந்ததும் இந்தியா திரும்புவார். வந்ததும் இந்த விழாவில் இவர் கலந்து கொள்வார். திருக்குறள் முத்துசாமி அவர்கள் பேச இருக்கிறார், இசை இயக்குநர் பாரதி ராஜாவைக் கூப்பிட்டு இருக்கிறோம்; அவர் காட்டு வாசிகளை இயற்கைராசியில்வைத்துப் படம் எடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/188&oldid=802505" இலிருந்து மீள்விக்கப்பட்டது