பக்கம்:படித்தவள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ராசீ



“அந்த அளவுக்குப் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்; அது எங்களுக்கு ஆறுதல் பரிசு” என்கிறாள்.

அவள் உறுதியாக ஒரு வேலைக்குப் போவது என்பதில் அவள் பேச்சு சுழன்றது.

“உழைப்பாளி படம் பார்த்தீர்களா?” என்று கேட்டாள்.

“வீடியோவில் வரவில்லை” என்றேன்.

“அர்ங்குக்குப் போய்ப் பார்க்கலாமே” என்றாள்.

"முதல் நாள் டிக்கட்டுக் கிடைக்கவில்லை; இனி அதற்குப் போவது இல்லை என்று விட்டு விட்டேன்.”

“அப்புறம் போவது?”

“அதில் சுவை இல்லை; அதை விட மண்ணெண்ணெய் போட்டுக் கொளுத்திக் கொள்ளலாம்” என்றேன்.

அந்தப்படம் வெளியிட்ட போது ரசிகன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான் முதற்படம் பார்க்க முடியாமல் என்ற செய்தியைத் தெரிவித்தேன்.

“எதற்குச் சாவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது இந்த நாட்டில். இவனுக்கு என்ன தியாகத் தொகையா கிடைக்கப் போகிறது?” என்றாள்.

“இளைஞர்கள் துடிப்பு உடையவர்கள்” என்றேன்.

“படிப்புக் குறைவு” என்று அவள் சுட்டிக் காட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/22&oldid=1123434" இலிருந்து மீள்விக்கப்பட்டது