பக்கம்:படித்தவள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

21



3

ண்ணையார் என் பேச்சு நண்பர். ஓய்வு பெற்ற இந்த வயதில் சாய்வு பெறுவதற்கும் பேச ஆள் தேவைப்பபடுகிறது. அவர் திண்ணை சற்று விசாலமாகவே இருந்தது. நிலம் சரியாகப் பயிரிடுவார் இன்மையால் மெல்ல மெல்ல நிலங்களை எல்லாம் ஒன்றும் பாதியுமாக விற்றுவிட்டுச் சென்னை வந்து சேர்ந்துவிட்டார். ஊரிலே பெரிய திண்ணை. அதே மாதிரி இங்கே கட்ட வேண்டும் என்று திண்ணை வைத்து வீடு கட்டி இருக்கிறார்.

பொதுவாகக் கோயில்களின் முன்னால் இந்த மாதிரி திண்ணை போட்ட வீடுகள் இருந்தால் திருவிழாக் காலங்களில் பக்த கோடிகள் ஒதுங்குவதற்கு உதவுகின்றன. சோறு போடுவது புண்ணியம் என்று சொல்லுவார்கள். அதைவிட யாராவது தங்குவதற்கு இடம் தந்தால் பெரிய தர்மம் என்று அவருக்குப் பட்டது.

இரவிலே இந்த இடத்தில் யார் யாரோ வந்து ஒதுங்குகிறார்கள். அதனால் இதற்குக் கிராதி போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அந்த வியாதி இவரையும் பிடித்துக் கொண்டது. அந்தக் கிராமத்து வீட்டைச் சிரமம் இல்லாமல் நகரத்து வீடாக மாற்றி விட்டார். திண்ணை இருந்த இடம் ஆபீசு அறையாக மாறி விட்டது. தொலைபேசி இடையிடையே அவரை எண்ணிட்டுக் கூப்பிட்டுக் கொண்டு இருந்தது.

அவர் ஜோசியம் சொல்வதை ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்தார். அது மிகவும் தேவைப்படும் கலையாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/23&oldid=1123435" இலிருந்து மீள்விக்கப்பட்டது