பக்கம்:படித்தவள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ராசீ


விட்டது. எதையும் தைரியமாக நம்பும் சூழ்நிலை குறைந்து வருகிறது. துணிந்து நாளை என்ன நடக்கும் என்று கூறமுடியாது. அதை முன் கூட்டிச் சொல்வது என்றால் உண்மையில் அது அற்புதக் கலைதான்; தேவையும் கூட.

நான் அவரிடம் போகும்போது சட்டம் படித்து நல்லபடி சம்பாதித்துக் கொண்டு வரும் நாற்பதைக் கடந்த நடுத்தர வயது உடையவர். அவர் தம் சாதகம் என்று ஏதோ குறிப்புகளைக் கொடுத்து ‘குரு’ எங்கே இருக்கிறான் என்று தேடிக் கண்டு பிடிக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். காணாமற் போனவர்களைத் தேடுவது போல என் நண்பர் துருவித் தேடிக் கண்டு பிடித்தார்.

“உனக்குக் குரு நல்ல இடத்தில் வந்து தங்கி இருக்கிறான்; நீ வேண்டாம் என்றாலும் அவன் உன்னை விட்டுப் போக மாட்டான்” என்று தெளிவு படுத்தினார். “நீ தொடும் வழக்குகள் எல்லாம் தோல்வியே அடையாது. குருபதி உன்னிடம் இருப்பதால் நீ அதிபதியாக இருப்பாய்; நீதிபதி ஒன்றும் உன்னை அசைக்க முடியாது. நீ சொல்வது அவர் கேட்டுத்தான் ஆகவேண்டும். வேறுவழி இல்லை” என்று உற்சாகப் படுத்தினார்.

அவர் துணிந்து கூறும் மொழிகள் ஆறுதல் உடையனவாக இருந்தன. தன்னம்பிக்கையும் வாத நம்பிக்கையும் இல்லாத இந்த மடசாம்பிராணிகளுக்குச் சில உறுதிகள் தேவைப்படுகின்றன. என் நண்பர் அவற்றைத் துணிந்து கூறுகிறார்.

அவரிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. ஜோசியம் சொல்வார்; ஆனால் காசுகள் வாங்க மாட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/24&oldid=1123436" இலிருந்து மீள்விக்கப்பட்டது