பக்கம்:படித்தவள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

23



“ஏன் சார் இதை ஒரு தொழிலாக வைத்து நடத்தலாமே” என்றேன்.

“நம்மிடம் வருபவரிடம் காசு பெற்றால் நாம் சொல்வதை நம்பமாட்டார்கள். நம்மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். நாம் எதைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்; இதற்கு நான் காசு வாங்குவது இல்லை” என்றார்.

‘பாப்பா’ என்று கூப்பிட்டார்; அங்கே ஒரு கிழவி வந்தாள்; வியப்பாக இருந்தது.

“இது அவளுக்குச் சின்னவயதில் வைத்த பெயர்; அதை மாற்ற முடியவில்லை” என்றார். அவளை அந்த அறையைப் பெருக்கச் சொன்னார்.

“அன்று எழுதி வைத்ததை யாரும் மாற்றமுடியாது” என்று கிண்டலாகச் சொன்னேன்.

கல்வி கற்றவர்; நீதி பேசுகிறார். சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்; திட்டங்களை அலசுபவர். அவருக்குத் தன் தொழில்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்ததைக் கண்டு வியப்பு அடைந்தேன்.

தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தலையோங்கியது. நீதி வெல்ல வேண்டும் என்ற நியாயம் அவருக்குத் தோன்றவில்லை. தன் வழக்குத் தவறானதாக இருந்தால் இடறிவிழவேண்டியதுதான். அதற்கு அவர் எப்படிப் பொறுப்பு ஆக முடியும்.

“உங்களை வந்து அவர்கள் சரண் அடைவது நன்றாக இல்லை” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/25&oldid=1123437" இலிருந்து மீள்விக்கப்பட்டது