பக்கம்:படித்தவள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

25



“காயசித்தி என்ன ஆயிற்று” என்று என் பேச்சைத் தொடர்ந்தேன். அவருக்கு உற்சாகம் கிளம்பி விட்டது. கையில் ‘திருமூலர்’ வைத்திருந்தார்.

“இவர் யார்?” என்று கேட்டேன்.

“இவரைத் தெரியாதா?”

ஏதோ சனாதிபதியை அறிமுகப்படுத்துவது போல என்னைக் கேட்டார்.

பத்திரிகையில் வரவில்லையே என்றேன். அவர்கள் நல்லது எல்லாம் இருட்டடிப்புச் செய்து விடுவார்கள் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். திரை நடிகையைப் போட்டால்தான் விற்பனை ஏற்படும் என்று நினைக்கிறார்கள் என்றார்.

“இவரைப் போட்டால் கதவு அடைப்புத்தான் செய்ய வேண்டும்” என்றேன்.

“சித்தர் திருமூலர் இவர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்” என்றார்.

“கின்னசில் இடம் பெற வேண்டியவர்” என்றேன்.

“உங்களுக்குக் கிண்டலாக இருக்கும்; மனிதன் நீடித்து வாழமுடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு அற்றுவிட்டது. மனிதன் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான்; வாழ முடியும்; ஆதி மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். விவிலியம் அப்படித்தான் சொல்கிறது” என்றார்.

“அவனுக்கு ஒரு துணைவி இருந்தாளாமே! ‘ஈவ்’ என்பது அவள் பெயராமே. Evil என்ற ஆங்கிலச் சொல்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/27&oldid=1123439" இலிருந்து மீள்விக்கப்பட்டது