பக்கம்:படித்தவள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

27



“உங்களை விட்டுப் போனதும் வேறு இடத்திற்குப் போய் விட்டேன். இப்பொழுது தண்ணீர் அடிக்கிறேன்” என்றான்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அவன் நிதானம் இழக்கவில்லை.

“இந்தப் பழக்கம் எத்தனை நாளிலிருந்து” என்று கேட்டார்.

“நெய்வேலிக்கும் பண்ருட்டிக்கும் போய் வருகிறேன். லாரியில் தண்ணீர் கொண்டு வருகிறேன். சத்தம் ஆயிரம் கிடைக்கிறது. அதில் நித்தம் எனக்கு இருநூறு தருகிறார்கள்” என்றான்.

“அடபாவி இதை அப்பவே சொல்லித் தொலையக் கூடாதா” என்று தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அவர் ஏன் இவரிடமிருந்து வேலையை விட்டான் என்பது தெரிந்தது, ‘தண்ணீர் தண்ணீர்’ இந்தப் படம் அவனுக்கு அதிக வருவாய் தந்தது. மக்கள் கண்ணீர் பெருகும் காலத்தில் எல்லாம் வியாபாரிககளுக்குக் கொண்டாட்டம் தான்.

“இப்பொழுது உங்களுக்கு டிரைவர் இல்லையா” என்று கேட்டேன்.

“Self driving தான்” என்றார்.

“அது ரொம்பவும் உத்தமம்” என்று தெரிந்தது போல் பதில் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/29&oldid=1123441" இலிருந்து மீள்விக்கப்பட்டது