பக்கம்:படித்தவள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ராசீ



“சம்பளம் ஒன்பது நூறு கொடுத்தேன். ‘பேட்டா’ தினம் பத்து கேட்டு வாங்கிக் கொண்டான்; இப்பொழுது விலகி விட்டான்” என்றார்.

“இப்பொழுது போக்குவரத்து நெரிசல் ஆகிவிட்டது; ஒட்டுவது எளிதல்ல; முடியவில்லை. அதை விட பிரமுகர்கள் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள் அவர்கள் வருகிறார் என்றால் சாலைகள் தம்பித்துப் போகின்றன.”

“இவர்கள் இனிமேல் ஹெலிகாப்டரில் போனால்தான் மற்றவர்கள் நிம்மதியாகப் போகமுடியும்” என்றார்.

“இன்னும் பத்து வருஷம் போனால் எப்படி இருக்குமோ?”

“அது வரையும் சென்னை தாக்குப்பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை” என்றார்.

“அதனால்தான் நான் கார் வாங்கவில்லை” என்று பெருமையாகப் பேசிவைத்தேன்.

“அது இருந்தாலும் சிரமம்; இல்லாவிட்டாலும் சிரமம்” என்றார்.

“யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்” என்று அதற்கு நிகராக ஒரு பழமொழியைச் சொல்லிவைத்தேன்.

“உங்களுக்கு வசதி இருக்கிறது; அது அவசியம் தேவைப்படுகிறது” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/30&oldid=1123442" இலிருந்து மீள்விக்கப்பட்டது