பக்கம்:படித்தவள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

29



“தேவை இருக்கிறது. அதனால் அதை வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது” என்று திருத்தம் கூறினார்.

நாங்கள் பேச்சை எங்கே தொடங்கினோம் என்பது மறந்தே விட்டோம்.

“சென்ற பிறவியில் விட்டோம்; இப்பொழுது புதுப் பிறவிக்கு வந்திருக்கிறோம்” என்றேன்.

“டேய்! இரண்டு கப் காப்பி வாங்கி வா” என்றார்.

“சர்க்கரை போட்டதா போடாததா” என்று கேட்டான்.

நான் புதியவன்; என் இரத்தம் எந்தச் சுவை என்பது அவருக்குத் தெரியாது.

அவருக்கு உப்பு இருக்கிறது: சர்க்கரை இல்லை; எனக்கு எதுவுமே இல்லை.

“அவருக்குச் சர்க்கரை இல்லை; சீனி போட்டே வாங்கி வா” என்றார்.

“இந்தச் சர்க்கரை நோய் பொல்லாதது” என்றேன்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்; உங்களுக்கு இல்லையே” என்றார்.

“வந்து போய்விட்டது பத்து வருஷம் இன்சுலினில் தான் இருந்தேன். நானே போட்டுக்கொள்வேன். இப்பொழுது இல்லை” என்றேன்.

“அது எப்படி முடியும்; ஒரு முறை வந்தால் அது சாகும் வரை தொடரும் என்று கூறுகிறார்களே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/31&oldid=1123443" இலிருந்து மீள்விக்கப்பட்டது