பக்கம்:படித்தவள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ராசீ



“இருபதும் ஏழும்” என்றார்.

“இருபத்தேழு என்று சொல்லி இருக்கலாமே?”

“ஜோசிய நூல் படித்துப் பழக்கம். அதில் வீடுகள் இப்படித்தான் சுட்டிக் காட்டுவர்கள்” என்றார்.

தொழில் பழக்கம் என்பது அறிந்தேன்.

“பெண்ணுக்கு வயது இருபத்து ஒன்று. அதுதான் கலியாண வயது” என்றார்.

“யார் நிச்சயித்தது?”

“அரசாங்கம்”

“சற்றுத் தள்ளிப்போடலாமே”

“முப்பதுக்குப் போகக்கூடாது”

“நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறீர்களே” என்று கேட்டுவிட்டேன்.

“தள்ளிப் போடவில்லை; கொள்ளி போட என் பேரன் பிறப்பான் என்று சாதகம் கூறுகிறது. அவன் பிறந்து இரண்டாம் ஆண்டு நான் என் இரண்டு கண்களையும் மூடி விடுவேன் என்று எழுதி இருக்கிறது. அதைச் சற்றுத் தள்ளிப் போடலாமே என்றுதான் பொறுத்து இருக்கிறேன்” என்றார்.

“நீங்கள் வருமுன் காத்திருக்கலாமே?”

“எதைச் சொல்கிறீர்?”

“மகனைப் பெறாமல் இருந்திருக்கலாமே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/40&oldid=1123452" இலிருந்து மீள்விக்கப்பட்டது