பக்கம்:படித்தவள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

43




“உன்னை விட அவள் வசதி மிக்கவளா?”

“இருக்கலாம்; தெரியாது”

“அப்படியானால் மறந்து விடு” என்று அறிவுரை கூறினேன்.

“உங்களைக் கேட்கவில்லை. ஜோசியரைத்தான் கேட்கிறேன்” என்று திருத்தம் கூறினான்.

பண்ணையார் அவன் கிரகங்களை எண்ணினார். விண்வெளியே பயணம் செய்தார். சுக்கிரன் சனி குரு புதன் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்தார்; அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று வழிகாட்டி நூல் ஒன்றை வைத்துப் புரட்டிப் பார்த்துக் கண்டுபிடித்துச் சொன்னார்.

“சனி எட்டாம் திசையில் இருப்பதால் அவளும் உனக்கு எட்டாத தூரத்துக்குப் போய்விடுவாள்; உனக்குத் தாலி பாக்கியம் இல்லை; தனபாக்கியம்தான் உண்டு” என்று சொல்லிமுடித்தார்.

“ஐயா! அவள் பெயர் தனபாக்கியம். பேர் ராசி பார்த்து அவள் பெயர்ந்து திரும்புவாளா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்று வேண்டிக்கொண்டான்.

“அவள் நல்லவள்தான்; கிரகதோஷம் அவளை ஆட்டிப் படைக்கிறது” என்றார்.

“என்னை ஆட்டிப்படைக்காமல் இருக்க வேண்டும்; அதைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்றான்.

“தனபாக்கியம் என்ற பெயர் இருப்பதால் அவள் உன்னிடம் வர வாய்ப்பு இருக்கிறது. பிறகு நீ அவளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/45&oldid=1129736" இலிருந்து மீள்விக்கப்பட்டது