பக்கம்:படித்தவள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ராசீ


பத்திரமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும்; அந்தப் பொறுப்பு உன் கையில்தான் இருக்கிறது” என்று கூறினார்.

“உன் பையிலும் இருக்கிறது.” என்று பேசிச் சிரிக்க வைத்தேன்.

மலடி கரு உற்றது. போலவும், குருடன் விழி பெற்றது போலவும், செத்தவன் உயிர் பெற்றது போலவும் நிதி நிறுவனங்களில் கட்டிய டெபாசிட்டுகள் ஒழுங்காக கைக்கு வந்தது போலவும் சென்றவள் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

எல்லாம் ஜோசியரின் கருணை என்று அவன் அவர் கணிப்புத் திறனைப் பாராட்டினான்.

“இவளா இவன் மனைவி” என்று ஆச்சரியத்தில் கேட்டு வைத்தேன்.

“ஏன் கேட்டீர்கள்?” என்றார்.

“அழகாக இருக்கிறாளே என்பதால்” என்றேன்.

“அழகாக இருக்கக்கூடாதா?” என்று கேட்டார்.

“இல்லை; அவள் திரும்பி வந்துவிட்டாளே. அதனால் தான் கேட்டேன்” என்றேன்.

பிரிந்தவர் கூடினால் பேசாது இருக்க முடியுமா? அம்பு மழை தொடுத்தாள்.

“போனவள் திரும்பமாட்டாள் என்று நினைத்து விட்டாயா? புது ஜாதகம் பார்க்க வந்து விட்டாயா?” என்று விசாரணை நடத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/46&oldid=1139507" இலிருந்து மீள்விக்கப்பட்டது