பக்கம்:படித்தவள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
படித்தவள்
45
 “உனக்குப் பாதகம் விளைவிக்க மாட்டேன். நீ போன இடத்தில் நிலையாக இருப்பாயா என்றுதான் விசாரித்தேன்.” என்றான்.

“உனக்கு ஒரு பாடம் கற்றுத்தரத்தான் போனேன். உன் மூஞ்சிக்கு எவன் சட்டை செய்வான் என்று சொன்னாயே! அதுக்கு ஆள் இருக்குது என்று காட்டத்தான் போனேன்” என்றாள்.

“அவன் ஏன் உன்னை விட்டு விட்டான்?”

“அவனுக்கும் இதே பிரச்னைதான். அவன் மனைவி அவனைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்டு இருக்கிறாள். “உன் மூஞ்சிக்கு எவள் வருவாள் என்று. அதுக்கு ஆள் இருக்குது என்று காட்டத்தான் என்னை அழைத்துக் கொண்டு போனான். அவள் திருந்திவிட்டாள்; என்னைத் திருப்பிவிட்டான்” என்று விளக்கம் தந்தாள்.

“இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி நீதிபதி போலப் பேசி அவர்கள் இருவரையும் விடுவித்தோம். “நன்றி” என்று சொல்லி அந்த நாயகன் எங்களை விட்டு நீங்கினான். இது சிரிப்பதற்கு ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூனியின் முதுகை இராமன் உண்டை வில்லால் அடிப்பான் என்று. சிறுவன் ஒருவன் பந்தடித்து முன்னால் இருந்த ‘பல்பை’ உடைப்பான் என்று.

இராமனைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் நடுநடுங்கிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/47&oldid=1139508" இருந்து மீள்விக்கப்பட்டது