பக்கம்:படித்தவள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை


கீற்றுகள்

கதை எழுதுபவன் இதில் ஒரு பாத்திரமாக இயங்கி நிகழ்ச்சிகளை விவரிப்பதாகக் கூறுவது இதன் அமைப்பு.

அவன் சத்திக்கும் முதல் பாத்திரம் ‘குண்டு பையன்’ அவனோடு உரையாடுவதில் கதை தொடங்குகிறது. இந்தப் படித்தவள் இதில் வரும் நான் ஒரு முதியவர்; அவர் பிறரோடு உரையாடுவதில் மகிழ்ச்சி காண்கிறார். அவர் சந்திக்கும் முதல் பையன் இவன்.

அடுத்து ‘பண்டம் விற்பனை செய்யும் வனிதை’; இன்று வீடு தேடி வருபவர்களுள் இவளும் ஒருவர். அவளோடு உரையாடுவதில் ஒரு மகிழ்ச்சி. அதில் அவர் சொற்சுவை காண முடிகிறது.

அடுத்த சந்திப்பு இந்தக் கதையின் நாயகி; படித்தவள். அவள் தன் பெயரை ‘பிறைமதி’ என்று கூறுகிறாள்.

‘காசு நாலு சம்பாதிக்க வேண்டும்’ என்று கூறுகிறாள். அதாவது படித்துவிட்டு வெளியேறி உலகத்தின் படிகளில் மிதிக்கிறாள்.

“ஏன்மா நீ சம்பாதித்துதான் ஆக வேண்டுமா?” என்பது இவர் கேள்வி.

“படித்தவள் சும்மா இருக்க முடியுமா?” என்று அவள் அவரைப் பார்த்துத் திருப்பிக் கேட்கிறாள்.

“படித்தவள்” அதுதான் பிரச்சனை என்று தெரிந்தது என்கிறார் கதை சொல்பவர். அவள் பிரச்சனைகள் கதையின் மையப் பொருளாக அமைகின்றன. “அவள் சுவைப்படப் பேசிச் சுமையைக் குறைத்தாள்”என்று கூறுகிறார். உரையாடல்கள் இன்றைய படித்தவளின் நிலையை, விளக்குகின்றன. இவளை வைத்தே கதை பின்னப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/5&oldid=1123027" இலிருந்து மீள்விக்கப்பட்டது