பக்கம்:படித்தவள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
ராசீ
 


‘நா காக்க’ என்பது இப்பொழுது அவசியம் ஆகி விட்டது. பழங்காலத்திலே போருக்குச் சென்றானாம் ஒரு தலைவன். வீட்டில் தலைவி இருக்கிறாள். அவன் நினைவுகள் இருபக்கம் இழுக்கப்படுகின்றன.

இரண்டுக்கும் நடுவில் அவன் மனம் அல்லல் உறுகிறது. ‘தேய்புரிப் பழங்கயிறு போல’என் நெஞ்சு அழிந்து விடுமோ என்று அவன் கூறுகிறான். அது போன்ற நிலைமையாக என் நிலைமை ஆகிவிட்டது.

பிறை மதியை அவர் திருமகனுக்குப் பேசி முடிப்பதா என் அருமைமகன் வேலுச் சாமிக்குக் கட்டி வைப்பதா என்று இருபால் படாது என் நெஞ்சு அலைவுற்றது.

7

பிறையை அடிக்கடி பார்க்க முடிவது இல்லை: எப்பொழுதாவது தோன்றும்; மறையும். அவள் கையில் ஒரு கடிதம் வைத்திருந்தாள், முத்து முத்தாக எழுதி இருந்தது. கீழே ‘முத்து’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. அதைத் தவறிக் கீழே கத்தும் குயிலோசை பிறை கீழே போட்டுவிட்டாள்; அவள் குரல் கேட்பதற்கு இனிமையானது.

அதை எடுத்தேன்; கொடுத்தேன். “எடுக்கவோ உன் கையில் சேர்க்கவோ” என்றேன்.

அவள் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/50&oldid=1139512" இருந்து மீள்விக்கப்பட்டது