பக்கம்:படித்தவள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

49



“பாரதக் கதை நினைவுக்கு வருகிறது. பானுமதியுடன் கர்ண்ன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தான். திடீர் என்று தன் கணவன் குருடன் மகன் துரியோதனன் வருவதைப் பார்த்து ‘வெருட்டு’ என்று எழுந்தாள். அவள் ஆட்டத்துக்கு அஞ்சி எழுந்தாள் என்று தேரோட்டி மகன் கர்ணன் அவள் முந்தானை முடிச்சை அவிழ்த்தான். அப்பொழுது அவள் மேகலை பொத்தென்று விழுந்தது.

துரியோதனன் கொஞ்சம் கூடச் சந்தேகப்படவில்லை. சேலையைத் தொட்டதும் வேலை எறிய வேண்டிய காளை அவன். என்ன சொன்னான் தெரியுமா? கர்ணா! எடுக்கவோ கோக்கவோ என்றான். அந்தச் சொற்களை நீங்கள் சொல்வது எனக்குச் சிரிப்பை உண்டாக்கியது” என்றாள்.

“இலக்கியத் தாக்கம்” என்றேன்.

“இது என் பிரிய நண்பர் முத்துவின் கடிதம். என் சோர்வு நண்பர்” என்றாள்.

எனக்கு விளங்கவில்லை இது புதுநட்பு; படிக்கும் இளைஞர்கள் அடக்கம் மீறி அடிக்கடி சந்தித்து அரட்டை அடித்து அதனால் ‘பாவியத் தோழமை’ பெறுவது உண்டு: துள்ளி எழும் இளமை; அதன் உரிமை அது.

‘சோர்வு நண்பர்’ என்ற புதிய சொல் எனக்குப் புதிரைத் தோற்றுவித்தது.

“தொழில் தேடுபடலத்தில் எழில் பெற அமைவது இந்தப் புதிய நட்பு” என்றாள்.

“உமக்குத் தெரியாது ஒவ்வொரு இன்டர்வியூவிலும் உள்ளே எங்கள் முதலாளிகளைச் சந்திக்கிறோமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/51&oldid=1139513" இலிருந்து மீள்விக்கப்பட்டது