பக்கம்:படித்தவள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ராசீ


என்று பாடிய கவிஞர் அவர் கண்ட கனவு வேறு; நடைமுறை வேறு.

‘கல்விக்கு உரியவனைக் கட்டி வைப்போம்
காரியம் யாவும் சாதித்து முடிப்போம்’

என்று இளைஞர்கள் இன்று சிந்து பைரவி பாடத் தொடங்கி விட்டனர்.

நாங்கள் ஆண்களோடு போட்டி போட்டுக் கொண்டு படிக்கவில்லை; எங்களுக்குள்தான் படிப்புப் போட்டி.

எங்களை மணம் செய்து கொள்வதால் நன்மை உண்டு. அவனோடு ஒட்டுவோம்; உறவு முறிந்தால் வெட்டிவிடும் இயல்பு எங்களில் பலருக்கு ஏற்படுகிறது.

படித்தவள் முதலில் கூட்டுக் குடும்பத்தை உடைக்கிறாள் என்ற கெட்ட பெயர் எங்களுக்குப் படிந்து விட்டது. முன்பு எல்லாம் சிலைகளை அலங்கரிப்பது போல் எங்களை அலங்கரித்துக் கலையழகு கண்டனர்; இப்பொழுது நாங்கள் அழகு அங்காடிகளுக்குச் சென்று நிலை குலைந்து அலங்கோலமாக நின்று அவர்களுக்குப் புதுமை தர வேண்டி இருக்கிறது.

எங்கே நாங்கள் மணமுறிவு ஏற்படுத்தி விடுகிறோமோ என்று மன முறிவுள் அரிப்புக் காண்கின்றனர். நித்திய கண்டம் பூரண ஆயுள் எங்கள் ஒப்பந்தங்கள்.

எந்தக் கணவனாவது எங்களைத் துணிந்து எங்கள் மேல் கை வைக்கமுடியுமா! அடிப்பது இருக்கட்டும் ‘அடி’என்று கூறவும் ஒரு அடி எடுத்து முன் வரமாட்டான். ‘அம்மா’ என்று அழைக்கும் புதுமை வந்து விட்டது. தாய்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/54&oldid=1139516" இலிருந்து மீள்விக்கப்பட்டது