பக்கம்:படித்தவள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
படித்தவள்
57
 


“அவரை வைத்துச் சமாளிக்க முடியவில்லை. செலவுக்கு நான் சம்பாதிப்பதையும் பங்கிட்டுக் கொள்கிறார்.”

“இரண்டு பிள்ளைகள்; பெண் மூத்தவள். நன்றாகப் படிக்கிறாள். மற்றவன் பையன்; நன்றாக விளையாடுகிறான்” என்றாள்.

“அவனைப் படிக்கச் சொன்னால் டி.வி. வாங்கிக் கொடுத்தால்தான் படிப்பேன்” என்று அடம் பிடிக்கிறான். டி.வி. வாங்கிக் கொடுத்தால் எங்கே படிக்கப் போகிறான். அதைத்தான் பார்த்துக்கொண்டு இருப்பான்” என்றாள்.

“வீட்டிலாவது இருப்பான். இப்பொழுது அடுத்த வீடு: எதிர் வீடு என்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறான். அதுவாவது நிற்கும்” என்று குறைப்பட்டுக் கொண்டாள்.

“வண்ணமா சுண்ணமா?”

“கருப்பு வெள்ளைதான். வண்ணத்துக்கு எங்கே போவது? அவர் வரும்போது ஒன்று வாங்கி வரச் சொல்லலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் கடன் அடையட்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றாள்.

“பெண் ?”

“அவள் ஒழுங்காகப் படிக்கிறாள்; அடுத்த வருஷம் ‘பிளஸ்டூ’ டியூசன் வைத்தால் நன்றாக இருக்கும். வாத்தியாருக்குக் கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை. இந்த விஷயத்தில் வைத்தியரும் வாத்தியாரும் ஒன்றாகி விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/59&oldid=1139522" இருந்து மீள்விக்கப்பட்டது