பக்கம்:படித்தவள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
- 3 -

அடுத்தது பண்ணையார்; அவர் ஜோசியம் சொல்வது ஒரு பொழுதுபோக்காகக் கொண்டவர்; அவரைச் சந்தித்த மாந்தர்களுள் ஒருவர் சட்டம் படித்த வழக்கு உரைஞர்; வழக்குத் தொழில் செய்பவர். அவர் பண்ணையாரைச் சந்திக்கிறார். நடுத்தர வயதினர்; தன் சட்ட அறிவில் நம்பிக்கை வைக்கவில்லை; குரு பெயர்ச்சியில் அவர் நம்பிக்கை வைக்கிறார்.

‘திருமூலர்’ அந்த ஜோசியர் மதிக்கும் ஞானி; மூவாயிரம் ஆண்டுகள் வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுபவர். இதைப் பற்றிய விமரிசனம் அவர்கள் உரையாடல்களில் நிகழ்கிறது.

அந்த ஜோசியரைச் சந்திப்பது மற்றொருவர்; அவர் பழைய ‘கார் ஒட்டி’; அவன் அனுபவங்கள் உரையாடல்களில் இடம் பெறுகின்றன.

அவர்கள் உரையாடல்களை ஒட்டி ஒரு வினா எழுப்பப்படுகிறது. “பெண் கள்ளா காவியமா?” என்று ஒரு வினா எழுப்புகிறார் ஜோசியர்.

“கள்ளோ காவியமோ” என்ற அறிஞர் மு.வ.வின் நாவல் எழுப்பும் வினா இது.

அதற்குத் தரப்படும் விடை இது.

“ஆரம்பத்தில் கள்; வெறி கொள்ளச் செய்கிறாள்; பிறகு காவியம்: நமக்கு நெறிகளைச் சொல்லிக் கொண்டிருப்பதால்” என்பது விடையாக அமைகிறது. இது நகைச்சுவைக்கு இடமாக அமைகிறது.

அறிஞர் பெர்னாட்ஷா ‘கள்’ என்கிறார்: மு.வ. அவர் ‘காவியம்’ என்று முடிக்கிறார். இந்த உரையாடல் இரண்டயுைம் ஒப்புக் கொள்கிறது; இது ஒரு புதிய சிந்தனையாகவும் அமைகிறது.

ஜோசியரை நோக்கி ஒரு ஒசி கிராக்கி வருகிறது.

“ஏன் சார் ஒருத்தி கூட நிலைத்து இருக்கமாட்டேன் என்கிறாள்” என்று மனைவியைப் பற்றிய அழுகையைத் தன் தொழுத கையோடு கூறுகிறான்.

அவள் அவனுக்குப் பாடம் கற்பிக்க நினைக்கிறாள் ‘உன்னை எவன் சட்டை செய்வான்’ என்று அடிக்கடி அவன் அவளைக் கேட்டு இருக்கிறான்.


அவளும் அவனைப் பார்த்து “என்னை விட்டால் உனக்கு வேறு யாரும் கதி இல்லை” என்று சொல்லி இருக்கிறாள். அதன் விளைவு சுவராசியமான நிகழ்ச்சிகள், நகைச்சுவை இவர்கள் உரையாடல்களில் மிகுதியாக இடம் பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/6&oldid=1123418" இலிருந்து மீள்விக்கப்பட்டது