பக்கம்:படித்தவள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
ராசீ
 “நம்ம வீட்டில் வந்து சொன்னால் நானூறு; அவர்கள் வீட்டில் படித்தால் வெறும் நூறு” என்று அவள் பேசியது புதிய புறநானூறாகப் பட்டது.

“எல்லாம் நூறாகவே இருக்கிறதே!” என்று சிரித்தோம்.

“எதற்காக அவர்களுக்கு இவ்வளவு தொகை?”

“அவர்கள் படித்துத்தானே சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்தக் கஷ்டத்துக்காகத்தான்” என்றான். படித்தது சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். இப்பொழுது அவர்கள் படித்தால்தான் சொல்லித்தர முடிகிறது என்பது தெரிந்தது. பாடதிட்டங்கள் அப்படி என்று தெரிந்து கொண்டேன்.

“டியூஷன் வைக்காமல் படிக்க முடியாது” என்றாள்.

“அவர் ஒவ்வொரு முறையும் தவறாமல் எழுதுகிறார். பிள்ளைகளைப் படிக்கவை; எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. நான் அனுப்புகிறேன் என்று எழுதிக் கொண்டே இருக்கிறார்” என்றாள்.

அதற்குள் என் மனைவி என் பேச்சில் வந்து கலந்து கொண்டாள்.

“காதில் மூக்கில் என்ன ஒன்றுமே காணோமே” என்று அவள் பார்வை செல்லும் இடம் அதைப் பற்றி விசாரித்தாள். சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“அவற்றை அடகு வைத்து விட்டேன். வட்டி முழுகிப் போகும்போது எப்படியாவது மீட்பேன்; மறுபடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/60&oldid=1139523" இருந்து மீள்விக்கப்பட்டது