பக்கம்:படித்தவள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

59


அவற்றை அனுப்பிப் பள்ளிக் கூடம் படிக்க வைப்பேன். இப்பொழுது பாடம் படித்துக் கொண்டிருக்கிறது” என்று விளக்கம் தந்தாள். கவிதைபோல் கழிவிரக்கம் காட்டியது.

அவள் சொல்லியது சோகம் பாடும் சோஷலிசக் கவிஞர்களின் கவிதையை ஒத்திருந்தது.

அவள் எதுவரை படித்திருக்கிறாள் என்று கேட்க விரும்பினேன்.

“முடிந்த வரை படித்தேன்” என்றாள்.

“அது எதுவரை ?”

“தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக்கொண்டே வந்தேன். எத்தனை முறை எழுதினாலும் அவர்கள் கருணை காட்டமுடியாது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஒன்று தேறினால் மற்றொன்ரு கால் வாங்கிக் கொள்கிறது. அந்தக் கொடுப்பனை நமக்கு இல்லை என்று இந்த விற்பனைக்கு வந்து சேர்ந்தேன்” என்றாள்.

10

“ராதா என்று சொல்லிப்பாரு; அதை திரும்பிப் படித்துப்பாரு ‘தாரா’ என்று வரும்” என்றேன்.

சொல்விளையாட்டா வேண்டிக் கிடக்குது என்று கூறித் தன் விளையாட்டைத் தொடங்கினாள்.

வாழ்க்கைச் சுவையில் ஒரு சுழிப்பு நிலை ஏற்பட்டுவிடுகிறது. சந்தோஷத்தை உண்டாக்க முடியாத அலுப்பு சில சமயம் மனை வாழ்க்கையில் ஏற்பட்டு விடுகிறது. மாற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/61&oldid=1139524" இலிருந்து மீள்விக்கப்பட்டது