பக்கம்:படித்தவள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
படித்தவள்
61
 

ஒன்றும் அறியாத நிலை. அந்த நிலைக்கு நான் செல்ல விரும்பவில்லை.

பண்ணையார் இல்லம் மணி அடித்தால் பள்ளிப் பிள்ளைகள் துள்ளி வருவது போல் ஏதோ இரைச்சலைப் பெற்றிருக்கும். பிறை வயசு பெண்; அவளிடம் வாய்தா வாங்கிக் கொண்டு தான் பேச முடியும்; தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்க முடியாது. அவளை ஏதாவது தூண்டி விட வேண்டும். தொடு மணற் கேணிபோல அவள் புதுமைக் கருத்துக்கள் என்னைச் சிந்திக்க வைக்கும். அவளை அதிகம் பார்ப்பது இல்லை; ஸ்கூட்டர் அவளை அலைக்கழிக்கும்.

பண்ணையாரைப் பற்றிப் புதிய வதந்தி பரவி ஒலித்தது. இன்றைய திரைப்பட மையப் பாத்திரமாக இயங்குகிறார் என்று கேள்விப்பட்டேன். கடத்தலில் தடம் புரண்டு அடிக்கடி இவர் வெளிநாடு சுற்றி வருவதாகக் கேள்வி. போதைப் பொருளில் அவர் ஏதோ சம்பாதிப்பதாகக் கேள்வி. அதை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவர் அடிக்கடி சைனா சென்று வருவது மட்டும் உறுதி. கேட்டால் அங்கே ஒரு நூல் நிலையம் இருக்கிறதாம். இங்கே கிடைக்காத அதியற்புதமான வானசாத்திர நூல்களும் கணித நூல்களும் உள்ளனவாம்; அது கூட ஒரு காலத்தில் இங்கு வந்த சீன யாத்திரிகர் இவான் சுவாங்க் என்பவர் எடுத்துச் சென்றாராம். அவற்றை வைத்துக் கொண்டு ஜோசியத்தில் அவர்கள் மிகவும் முன்னேறி இருக்கிறார்களாம். இதுவரை அவர்கள் வரவழைத்து இவர் தேவையைக் கேட்டு அறிந்து ஒரு புதுக் கருவி படைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இது அவர் சொன்ன தகவல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/63&oldid=1139526" இருந்து மீள்விக்கப்பட்டது