பக்கம்:படித்தவள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
ராசீ
 


அதைக் கொண்டு ஒருவரின் ஆயுளைக் கணித்து அவர் என்று எப்பொழுது மரணம் அடைவார் என்று சரியாகச் சொல்லமுடியும் என்று கூறுகிறார்.

“அது எப்படி முடியும்?” என்று கேட்டேன்.

ஒருவன் பொய் சொல்வதும் கதை அளப்பதும் கண்டு பிடிக்கும் கருவி இப்பொழுது இல்லையா! அது போன்றது” என்று கூறுகிறார்.

“கெட்டிக்காரனாக இருந்தால் அந்தக் கருவியையும் ஏமாற்ற முடியும். சொன்னதை விடாமல் சாதித்தால் அது மெய் ஆகிவிடுகிறது” என்றேன்.

“கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டு பிடிக்கும் திரைக் கருவி வந்து இருக்கிறதே” என்றார்.

“எக்ஸ்ரே எடுப்பது போன்ற எளிய கருவி அது; இது எப்படி முடியும்?” என்று கேட்டேன்.

இது கம்ப்யூட்டர் யுகம்; அதற்கு வேண்டிய செய்திகளைத் தந்தால் அது உடனே முடிவு கூறிவிடுமாம். Calculator போன்ற கருவிஅது.

ஒரு மனிதரின் மருத்துவ அறிக்கை, பழக்க வழக்கங்கள், வயது; தரும சிந்தனை; பிக்கல் பிடுங்கல்; மனைவிகள்; துணைவிகள்; பாலியல் இவற்றைக் குறித்துக் கொடுத்தால் அது கூட்டிக் கழித்து வாழ் நாள் இது என்று காட்டிவிடும். விஞ்ஞான வளர்ச்சி இது” என்றார்.

“இதன் விலை?”

“இருபது லட்சம்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/64&oldid=1139527" இருந்து மீள்விக்கப்பட்டது