பக்கம்:படித்தவள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
படித்தவள்
63
 


“இவ்வளவு பணம் கொடுத்து வாங்கி என்ன பயன்?”

“என் கடைசி மூச்சு எப்பொழுது நிற்கும் என்று கண்டுபிடித்து விடலாம்.”

“ஒரு கயிறு கட்டிச் சுருக்குப் போட்டால் உடனே நின்றுவிடுகிறது” என்று கூறினேன்.

“என் சாதகம்’ அப்படி; என் மகனுக்கு மணமாகிக் குழந்தை பிறந்த இரண்டாம் ஆண்டு நான் இறுதிப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அது உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.

“இதற்கு இருபது லட்சமா?”

“அது இங்கே வரட்டும்; ஒகோ என்று உயர்ந்து விடலாம்; சதாகூட்டம்தான். கிழம் கட்டைகள் எல்லாம் இங்கு வந்து கூடாரம் அடிக்கும். நீ டிக்கட்டு போட்டு பிளாக்கில் விற்கலாம். உனக்கும் காசு சேர்க்க வழி பிறக்கும்” என்று கூறினார்.

முக்கியமாக ஆயுள் இன்சூரன்சு கம்பெனியில் இருந்து வருவார்கள். நல்ல கிராக்கி, நீ போகப் போகப் பார்: என்னைப் பிடிக்க முடியாது” என்று கூறுகிறார்.

எனக்கும் அவர் வியாதி ஒட்டிக் கொண்டது. என் மனைவியிடம் பேச்சு வார்த்தை இல்லை. இனிமேல் நான் இருந்து என்ன வாரிக்கொள்ளப் போகிறேன். தெரிந்து கொண்டால் சட்டுபுட்டுன்னு வேலுவுக்கு ஒரு கலியாணம் பண்ணிட்டு சங்கரா என்று சொல்லி எங்காவது விழுந்து கிடக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/65&oldid=1139528" இருந்து மீள்விக்கப்பட்டது