பக்கம்:படித்தவள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ராசீ



“நல்ல கருவிதான்” என்றேன்.

“ஆயுள் நீட்டிப்புக்கு வழி உண்டா” என்றேன்.

“உண்டு. சுடச்சுட அவரவர் மூத்திரம் காலையில் எழுந்ததும் குடிக்கவேண்டும்” என்றார்.

“இது எங்கே சொல்லி இருக்கிறது?”

“சித்தர்கள் அப்படிக் கூறி இருக்கிறார்கள்.”

“வைத்தியர்கள் என்ன சொல்கிறார்கள்?”

“அவர்கள் வாய் திறப்பதில்லை” என்றார்.

“ஏன்?”

“பெரிய மனிதர்கள் பலர் மனம் புண்படும் என்பதால்” என்றார்.

“யோகிகள் எப்படிச் சாகிறார்கள் தெரியுமா?” என்று கேட்டேன்.

“மண்டை வெடித்து” என்றார்.

“அதாவது உள்ளே இருக்கும் குண்டலினி. அதை எழுப்பி மேலே நெற்றி நடுவே கொண்டு செல்வார்கள். பின் அவர்கள் கபாலம் வெடித்து உயிர் வெளியேறுகிறது.”

“அது எங்கே போகிறது?”

“இறைவனோடு இரண்டறக் கலக்கிறது” என்றார்.

“இராம கிருஷ்ண பரமஹம்சர் எப்படி மரணம் அடைந்தார் தெரியுமா?”

“நெஞ்சில் புண்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/66&oldid=1139530" இலிருந்து மீள்விக்கப்பட்டது