பக்கம்:படித்தவள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
படித்தவள்
65
 


“ரமண மகரிஷி”

“கான்சர்.”

“விவேகானந்தர்?”

“அவரும் அப்படித்தான் என்று கூறுகிறார்கள்.”

“சிந்திக்கவேண்டியது” என்றேன்.

“சித்தர்கள் சிலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்கள்” என்றார்.

“கி.பி. இரண்டாயிரம் வருகிறது; இரண்டாயிரம் ஆண்டுகள் மனிதன் சாதித்தவை பல; தனி மனிதன் அல்ல; மனிதன் அவர்கள் மூவாயிரம் ஆண்டு வாழ்ந்து சாதித்தது என்ன?”

“மரணத்தை வென்று இருக்கிறார்கள்.”

“வெல்லவில்லை; தள்ளிப் போட்டு வந்திருக்கிறார்கள்.”

“அதுவும் ஒரு சாதனை தானே.”

“அவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது சாதனை அல்ல; அவர் எவற்றைச் செய்தார்; செய்தவை யாவை? அதுதான் கணக்கு வரும்” என்றேன். “உங்களுக்கு இந்தக் குறள் தெரியுமா?”

“தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

“நாம் என்ன செய்யவேண்டும் என்பதைச் சிந்தியுங்கள், செயல்படுங்கள்; எத்தனை நாள் வாழப் போகிறோம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/67&oldid=1139531" இருந்து மீள்விக்கப்பட்டது