பக்கம்:படித்தவள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

67


நிறத்தில் அவளுக்கு ஒரு வெறி இருந்தது. அது இந்த நாட்டின் வெறி, அதில் அவள் விதி விலக்கு அல்ல.

உன்னுடைய மகன் என்ன மன்மதனா? என்று கேட்டேன்.

“கருப்பு நிறம் தான்; ஆனால் விருப்பு அழகு அவனிடம் உள்ளது; உயரம்; அவனுக்குக் கியூவில் நிற்க அவன் வியூவில் பல பேர் இருக்கிறார்கள். பிறை படித்தவள்; அவளோடு பழகியவர் பலர் இருப்பார்கள்; அது மட்டும் அல்ல. முத்து என்பவன் யாரோ அவளுக்குத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான்” என்றாள்.

“தொலைபேசி வசதி இல்லை; அதனால் எழுதிக் கொண்டிருப்பார்கள்” என்றேன்.

“அலை பாயும் வயசு. அடுக்கடுக்காக எழுதுகிறார்கள்” என்றாள்.

“அவர்கள் நட்பு மலையினும் மாணப் பெரிது ஆகி விட வாய்ப்பு உள்ளது” என்றேன்.

“எழுதுவது பெரிது அல்ல. பிறகு அவன் அச்சிட்டு அவளை நச்சரிப்பான்” என்றாள்.

“இது கதை; அதைக் கேட்க நமக்கு என்ன அருகதை இருக்கிறது?”என்றேன்.

“அவள் வாழ்க்கையை மாசாக்குவானே” என்றாள்.

வேலுவுக்குப் பெண் கொடுப்பதில் சிலர் தயங்கி வருவதைச் சுட்டிக் காட்டினேன். ஊர் ஊராக மாற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/69&oldid=1139533" இலிருந்து மீள்விக்கப்பட்டது