பக்கம்:படித்தவள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ராசீ


கொண்டு வரும் அவன் பணி நிலை அவனுக்கு இடையூறாக இருப்பதைச் சுட்டிக் காட்டினேன்.

“இன்று டெல்லி பம்பாய் என்று போகத் தயாராக இருக்கிறார்கள். அவன் இருப்பது தர்மபுரிதானே?”

“தருமனுக்கு உரிய புரிதான்; எந்தத் திரெளபதியும் துணியமாட்டேன் என்கிறார்களே.”

“காரணம்?” என்று கேட்டாள்.

“இது மெட்ரோ சேனல்; ஸ்டார் டி.வி. அவை அங்குப் பரவவில்லையே; மாமியார் இருந்தாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை; மெட்ரோ இல்லாத வீட்டில் அடி எடுத்து வைக்க அவர்கள் வலது கால் இடம் அளிக்கவில்லையே” என்று சுட்டிக்காட்டினேன்.

இப்படி அவனுக்கு உரிய தர்ம சங்கடங்களை எடுத்துப் பேசி அதைப் பொருட்படுத்தாதவள் பிறை தான் என்று எடுத்துச் சொன்னேன்.

பிறை என்றுமே பிறையாக இருப்பது இல்லை; அது முழுமதியாக வளரும் என்றேன். அவள் படித்தவள்; பணம் படைப்பாள் என்று சுட்டிக் காட்டினேன்.

எங்கள் பேச்சுக்கு இடைவெளி ஏற்படுத்த என் பழைய நண்பன் இளையராஜா வந்து சேர்ந்தான்.

“ஹல்லோ ராஜா” என்று வரவேற்றேன்.

“பையனுக்குக் கலியாணம்” என்று சொல்லிப் பையில் நிறைய வைத்திருந்த அழைப்பிதழ்களில் ஒன்றை எடுத்து என் கையில் வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/70&oldid=1139534" இலிருந்து மீள்விக்கப்பட்டது