பக்கம்:படித்தவள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ராசீ



அவர் சென்றதும் எதிர்பாராதபடி என் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது.

பிரித்துப் பார்க்கிறேன்; அதில் பத்துக் கட்டளைகள் இருக்கின்றன.

“இந்தக் கடிதம் வந்த பத்தாம் நாள் உமக்கு அதிருஷ்ட தேவதை வந்து சேர்வாள் தபால் கடிதம் போல; ஆனால் ஒன்று நீ இதைப் பத்து நகல்கள் உன் கைப்பட எடுத்துப் பத்துப் பேருக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாவிட்டால் அஷ்டமத்துச் சரியன் உன்னை வந்து அடைக்கலம் புகும்.”

என்ன செய்வது? இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்றாலும் ‘ரிஸ்க்’ எடுத்துக் கொள்ள என் மனைவி விரும்பவில்லை. பத்துக் கடிதங்கள் தானே! எழுதிவிடலாம். அதிருஷ்டம் வராவிட்டாலும் ஆபத்துக்கள் வராமல் தடுக்கலாம் என்று அறிவுரை கூறுகிறாள்.

அந்தப் பணியை அவளுக்கே விட்டு விட்டு அவளிடம் இருந்து தப்பித்து வெறியேறினேன்.

11

ண்ணையார் இல்லம் எனக்குப் பொழுது போக்கு இடம்; அவரிடம் ஏதாவது பேசுவேன்; இல்லாவிட்டாலும் சும்மா இருப்பேன். ஜோசியம் பார்க்கிறவர்கள் வருவதும் அவர்களுக்கு இவர் ஆறுதல் கூறுவதும் மாறுதலாக இருந்தன.

அவர் மேசைமேல் வார இதழ் ஒரு ஒரத்தில் இருந்தது; அட்டைப் படத்தில் ‘தாடிக்காரரின் காதல்’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/72&oldid=1283765" இலிருந்து மீள்விக்கப்பட்டது