பக்கம்:படித்தவள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

71


போட்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை, என் நண்பன் எனக்கு அளித்த அழைப்பிதழ், இந்தத் திருமணம்தான்.

அதில் கவர் ஸ்டோரி உள்ளே தரப்பட்டிருந்தது. அவன் சொன்னது.

“நான் வழக்கமாக அந்தத் தியேட்டருக்குச் செல்வேன்; புதுப்படம் முதல் காட்சிக்கு முந்திக் கொள்வேன்; பெண்கள் வரிசையில் அவள் நின்று கொண்டு கைநீட்டுவாள்; வழக்கமாகப் பார்த்ததால் எங்களுக்குள் எங்களை அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அது ஒரு புதிய வார்ப்பாக அமைந்து விட்டது. அவள் தான் வைத்திருந்த டிக்கட்டை எனக்குத் தந்தாள். எனக்கு அது மகத்தான தியாகம் என்று கொண்டேன். பணம்கொடுத்து விடலாம்; தான் பிடித்துக் கொள்ளும் குடையைத் தந்து விட்டலாம். தனக்கு என்று வாங்கி வைத்த டிக்கட்டைத் தருகிறாள் என்றால் அவள் தயாளகுணம் என்னைக் கவர்ந்து விட்டது. அவளுக்கும் என்னைப் பிடித்துவிட்டது” என்று கூறி இருந்தாள்.

“அவர் என்னைப் பார்த்தது முதல் என் மனம் என்னிடம் இல்லை; அவர் முகவரி தேடிக் கண்டு பிடித்துச் சொத்து சுகம் இவற்றை எல்லாம் தெளிவுபடுத்திக் கொண்டு அந்தக் குடிக்கு அவர் ஒரே மகன் ஒரே வாரிசு என்பதை உறுதி செய்து கொண்டு என் மனச் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

அவரை ஞானியாக ஆக்கிவிடாமல் போணியாக ஆக்குவேன் என்பதில் எனக்கு உறுதி இருக்கிறது” என்று அவள் அந்த இதழில் சொல்லி இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/73&oldid=1283773" இலிருந்து மீள்விக்கப்பட்டது