பக்கம்:படித்தவள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ராசீ



இது படிப்பதற்குச் சுவையாக இருந்தது. அதற்குள் பழைய பல்லவி அங்குப் பல்லிளித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். அவர்கள் பிணக்கு நீடித்தது.

“என்ன புதுப்பிரச்சனை?” என்று விசாரித்தோம்.

“அந்த ஏழு நாட்கள்” என்றாள்.

“அது பாக்கியராஜாவின் படமாயிற்றே” என்றேன்.

“அதுதான் எங்கள் புதுப் பிரச்சனை. அந்த ஏழு நாட்கள் நீ எப்படி எப்படி இருந்தாயோ யார் கண்டது: இராவணனை நம்ப முடியும்; உன்னை நம்ப முடியாது என்கிறார் அவர்.”

“நீ என்ன சொன்னாய்?”

“தீக்குளிப்பேன் என்றேன்.”

“எதற்கு?”

“உண்மையை நிலைநிறுத்த”

உடனே அந்தச் செய்தி எங்கும் பரவியது.

‘மீண்டும் ஒரு சீதை’ என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன.

பி.பி.சி ஒளிப்பதிவாளர்கள் அவள் படத்தை எடுத்துப் போட்டு ‘பாரத தேசத்தில் பதிவிரதை’ என்று காட்டி விளம்பரப்படுத்தி விட்டார்கள்.

விளம்பரம் முற்றியது; அவள் தன் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை என்று அடம் பிடித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/74&oldid=1283781" இலிருந்து மீள்விக்கப்பட்டது