பக்கம்:படித்தவள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

75



அவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்தை அவர்; அறையில் புதிதாக அவர் மாட்டிய பெரியார் படம் காட்டியது.

“நெறி முறை பிழைத்த யானோ அரசன் யானோ கள்வன்” என்று சிலப்பதிகாரம் படிக்க ஆரம்பித்தார்.

“பையன் மணம்” என்றேன்.

“என் செல்வம் என்னை விட்டு நீங்கி விட்டது. என் செல்வன் அவனும் என்னை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது?” என்றார்.

“ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?”

“படித்த பெண் முதலில் இடித்துத் தள்ளுவது குடியிருந்த கோயில் தானே? பிறகு யார் எங்களுக்கு ஆதரவு.”

“ஜோசியம் என்ன சொல்கிறது?” என்று கேட்டேன்.

“அதைத் துாக்கி எறிந்து விட்டேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை” என்றார்.

“பேரன் பிறந்தால் உமக்கு மரணம்” என்று சுட்டிக் காட்டினேன்.

“அதை வரவேற்கிறேன்” என்றார்.

“என் மகனுக்குக் கலியாணம் ஆகி அவனுக்கு அழகிய மகன் அவதரிக்கிறான் என்றால் அவனைப் பார்த்து விட்டு அகமகிழ்வோடு இந்த அகன்ற மாநிலத்தை விட்டுச் செல்லத் தயார்” என்றார்.

காலம் கடந்து விட்டது. இந்தச் சிந்தனை ஆரம்பத்தில் இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/77&oldid=1284156" இலிருந்து மீள்விக்கப்பட்டது