பக்கம்:படித்தவள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ராசீ


ஜோசியம் கேட்க ஹாஸ்யர்கள் யாரும் வருவது இல்லை; தேர்வில் தோற்று விட்ட கட்சியின் வாக்குச் சாவடிப் பந்தல் போல் அவர் இல்லம் வெறிச்சோடியது.

13

பிறை முகிலில் இருந்து முகிழ்த்து வெளிப்பட்டாள். என் வீடு நோக்கி வந்தாள்; அவள் நடையில் வாழ்க்கை விடை தெரிந்தது; தெம்பும் தெம்பாங்கும் தமிழில் இசைத்தன. ஞானச் செருக்குக் கொண்டவள் போல் அவள் காணப்பட்டாள். முன்பெல்லாம் வேங்கடம் செல்லும் பக்தர்கள் முதல் மலை ஏறுவார்கள். அதற்குக் காளிகட்டம் என்று பெயர். முண்டியடித்து முட்டிபோட்டு முகடு ஏறி அங்கே அடைந்ததும் ஒரு பெருமூச்சு விடுவார்கள். காளி கட்டம் கடந்து விட்டோம். இன்னும் ஆறு மலைகள் இருக்கின்றன. அவை பெரிது அல்ல என்று பேசுவார்கள்.

பிறை காளிகட்டத்தை அடைந்து விட்டாள். வேலை கிடைத்து விட்டது.

‘அங்கிள்’ எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று நீட்டு ஒலையைக் கொண்டு வந்து காட்டினாள்.

நீட்டோலை வாசித்தேன்; நெடுமரமாக நின்று விட்டேன்.

“அதிர்ச்சியாக இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“எப்படி உன்னை வாழ்த்துவது என்று தெரியாமல் திகைக்கிறேன். தமிழில் சொல்தேடுகிறேன்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/78&oldid=1284157" இலிருந்து மீள்விக்கப்பட்டது