பக்கம்:படித்தவள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

77



“வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு”

என்று பாடுங்கள் என்றார்.

எனக்குப் புரியவில்லை. “நாம் பிறந்த மண்ணை வாழ்த்துங்கள் என்னை வாழ்விக்க முன்வந்திருப்பதால்” என்றாள்.

“இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன்.

“சாக்லேட் மென்று தின்ன வேண்டும்” என்றாள்.

“கடித்துத் தின்றால் தான் சுவை” என்று சொல்லி வாங்கிக் கொண்டேன்.

“நான் அல்லவா வாங்கித் தரவேண்டும்” என்றேன்.

“நான் ஈட்டத் தொடங்கி விட்டேன். கூட்டல் தேவை இல்லை; வகுக்கத் தொடங்கி விட்டேன்” என்றாள்.

இந்த எதிர் வீட்டுப் பைங்கொடி எனக்கு எந்த வகையிலும் கடமைப் பட்டவள் அல்ல. அவள் வெற்றி தோல்விகளை என்னோடு பங்கிட்டுக் கொள்கிறாள். அவளை இதே தெருவில் பல வருஷங்களாகப் பார்த்து வருகிறேன். அவள் தந்தையை விபத்தினால் வீட்டில் கொண்டு வந்து போட்டார்கள். வலிய அந்தத் துக்கம் விசாரிக்கச் சென்று இருக்கிறேன்; நாற்பது வயதில் இந்த நல்லுலகத்தை விட்டு நகர்ந்து விட்டார் என்றால் இதைவிட வேறு அதிர்ச்சி என்ன இருக்கும்? எனக்கு இளகிய மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/79&oldid=1284159" இலிருந்து மீள்விக்கப்பட்டது