பக்கம்:படித்தவள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ராசீ


ஓய்ந்து விட்டதைக் காட்டிக் கொண்டாள். சுவையாக இருந்த அவர்கள் வாழ்வு சுமையாக மாறியது.தன்னைத் தூக்கிவிடத் தன் மகனைத்தான் அவன் நம்ப வேண்டியதாயிற்று.

முத்து நின்று என்னிடம் அதிகம் பேசமாட்டான். வெட்டிப் பேச்சுப் பேசும் திண்ணை நான் என்பது அவன் முடிவு. என்னேடு சேர்ந்துதான் தன் தந்தை உள்ளதை ஓட்டப்பந்தயத்தில் ஒழித்து விட்டார் என்று அவன் தப்புக் கணக்குப் போட்டான். நான் சொல்லித்தான் அவர் அந்தக் கணிப்பொறி வாங்கினார் என்று கருதுகிறான். அவனுக்கு என்னைப் பற்றி விளக்க வாய்ப்பைத் தேடினேன்.

“பொறி இயல் படித்தும் நெறிப்படி ஏன் வேலை கிடைக்கவில்லை” என்று ஆரம்பித்தேன்.

“தொழிற்படிப்புக்கு வாய்ப்பு இருந்தது. அதுவும் அருகிவிட்டது” என்றான்.

“நீ வேறு தொழில்களுக்கு விண்ணப்பம் போட்டு வீணாக அலைவது ஏன்?” என்று கேட்டேன்.

“படிப்புக்கு ஏற்ற வேலை. என்று யாரும் காத்திருப்பது இல்லை. எது கிடைக்கிறதோ அதில்தாவிக்கொள்ள முயல்கிறோம்” என்றான்.

அவனைக் கொக்கிப்போட்டு வளைத்துப் போட்டேன்.

“உனக்குப் பிறை தெரியுமா?” என்றேன்.

“வான்பிறை எப்பொழுதாவது கண்ணுக்குத் தெரியும்” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/84&oldid=1284285" இலிருந்து மீள்விக்கப்பட்டது